பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் i57 இன்று காம் அரசாங்கத்தை எதிர்க்கவோ ... கலவ ரத்தை இங்கு உண்டாக்கவோ கூடியிருக்க வில்லை. தலைவர்களைக் கைது செய்தது தவறு. விடுதலை செய்யுங்கள் என்ற வேண்டுகோளே... பொதுமக்கள் அறியும்படிச் செய்ய நாம் செய்யும் ஒரு சாத்வீகமான முயற்சி. மறந்தும் நம்மால பிறர்க்கு இடையூறு ஏற்படாது. ஏற்பட விடக் கூடாது. கட்டுப்பாடு, கடமை, இவை காந்தியத் தின் இருபெரும் சட்டங்கள்! புறப்படுவோம். ராமன் : அண்ணு! எங்கே இன்னேக்குத் தலைமை வகிக்க வேண்டிய ஈஸ்வரமூர்த்தி இன்னும் வர வில்லையே, காரணம்? சுந்தரம் : ராமன்! கண்பர் ஈஸ்வரமூர்த்தி இன்றைய ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத கார னத்தை இந்தக் கட்டத்தில் கூற வேண்டாம் என எண்ணுகிறேன். அவருக்கு ஏதோ தவிர்க்க முடியாத அவசர வேலை, குடும்ப விவகாரம். பரவா யில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் காம் முடிவு செய்தபடி இன்றைய கொடி ஊர்வலம் நடந்தே திரும். ஈஸ்வரமூர்த்திக்குப் பதில் நானே தலைமை வகிக்கிறேன். ராமன் : சரி. எல்லாம் தயார்தான? நீங்கள் தாய் தந்தை யர் சம்மதத்துடன் தானே வந்துள்ளிர்கள்? சுந்தரம் : ஆமாம். ராமன் : இது சத்தியந்தானே. சுந்தரம் : சத்தியம்.