பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வீர சுதந்திரம் ராமன் : வந்தேமாதரம், குமரன் : வந்தேமாதரம் சுந்தரம் : யாரது? குமரன் : வங்தேமாதரம் அய்யா, சுந்தரம் : ராமன், யாரது? தம்பி புதுசாயிருக்கார்? ராமன் : இவரை எனக்குத் தெரியும். கல்லபிள்ளை. கம்ம ஈ, ஆர். அண்டு சன்ஸ் ஜின்னிங் பாக்டரியிலே கணக்கப்பிள்ளை. மகாத்மா மேலே ரொம்ப பக்தி யுள்ளவர்; பெயர் குமாரசாமி. குமரன் : ஆமாய்யா. வீட்டிலே குமரன்னு கூப்பிடு வாங்க. சுந்தரம் : இவர் பெயர் கம்ம சத்தியாகிரகிகளின் பட்டி யலில் இல்லையே தம்பி. ராமன் : இல்லாவிட்டால் என்ன அண்ணு. இன்று வராத ஈஸ்வரமூர்த்திக்குப் பதிலாக அந்த ஈஸ்வரனுப் பார்த்து இந்தக் குமரனே அனுப்பி வச்சிருக் காருன்னு எண்ணிக்குவோம். சுந்தரம் : பெற்றேர்களின் அனுமதி: குமரன் : பெரியவங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டு தானப்யா வந்திருக்கேன். சுந்தரம் : இருந்தாலும் பாவம்! பார்த்தா ரொம்ப மெலிஞ் சிருக்கிறே தம்பி. அடிகிடி பட்ட தாங்கனுமே.