பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வீர சுதந்திரம் எப்படியும் இயக்கத்தை அடக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவு. எதிர்பாராதபடி ஏதாவது கேர லாம், ஆகையால் எல்லாவிதக் கஷ்டங்களையும் எதிர் பார்த்துதான் இதிலே ஈடுபடனும். குமரன் : உங்கள் அன்பான அறிவுரைக்கு எனது நன்றி. ஆனல் நான் நீங்க சொன்ன மாதிரி அவசரப் பட்டோ, அல்லது உணர்ச்சிவசப்பட்டோ, ஆவேசப் பட்டோ இந்த முடிவுக்கு வரவில்லை. இதந்தரு மனையும்நீங்கி இடர்மிகுசிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டு மாறிப் பழிமிகுத் திழிவுற்ருலும் விதந்தருகோடியின்னல் விளைந்தெமை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே! என்ற மகாகவி பாரதியின் மந்திரத்தை, என் வாழ் வின் இலட்சியமாக்கிக் கொண்டுதான்வந்துள்ளேன். எம்மான் காந்தியண்ணலை என் இதய முச்சாக வைத்து உயிர்வாழும் ஒரு ஏழைத்தொண்டன் நான்! ஆனல் ஏழையின் கெஞ்சத்தில், தேச பக்தி என்ற உணர்ச்சிக்கு இடமே இல்லை என்று இந்த காட்டின் தலைவர்கள் முடிவு கட்டினுல், கான் உண்மையி லேயே இந்த இயக்கத்தில் பங்குகொள்ள அருகதை யற்றவன்தான். சொல்லுங்கள். என்போன்ற ஏழைக்கும் சுதந்திர இயக்கத்திற்கும் சம்பந்தமில்லே என்ருல், அதையும் சொல்லிவிடுங்கள், நான் உங்களுடன் வரவில்லை. திரும்பிவிடுகிறேன். சுந்தரம் : தம்பி! நீ ஒரு ஏழை என்பதற்காகவோ, அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ, நான் உன்னை வேண்டாமென்று சொல்லவில்லை. அப்படி யெல்லாம் சந்தேகப்படமாட்டேன். மகாத்மாவின்