பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ; 24 காலம் : காலை. இடம் : ஆஸ்பத்திரியில் ஒரு புறம், நிகழ்ச்சி : விலங்கு போடவேண்டுமென்ற உத்தரவுடன் வந்த இன்ஸ்பெக்டருடன் டாக்டர் உரையாடுதல். பாத்திரங்கள் : குமரனின் தாய் கருப்பாயி, ஒரு பெரிய வர், டாக்டர், இன்ஸ்பெக்டர், நர்ஸ் முதலியோர். கருப்பாயி அண்ணு! நான் என்ன செய்வேண்ணு. எவ் வளவோ சொன்னேன். ஏழைக்கு எதுக்கப்பா இந்த வேலையெல்லாம்னு படிச்சுப் படிச்சு சொன்னேன். ஊர் பெரியவங்களும் சொன்னுங்க. ஒன்றும் வராது. தைரியமா இரும்மா-செளக்கியமா கான் திரும்பி வந்துடுவேன்ன சொல்லிட்டு வந்தோனே, ஆணு என் மகனே இப்படி சித்திரவதைப் பண்ணிட்டானுகளே பாவிப் பாசங்க உருப்படுவாங்களா? அய்யய்யோ! என் குழந்தை என்ன பாடு படருனே தெய்வமே நான் என்ன செய்வேன்? என் பிள்ளை பிழைச்சு வரு வானு அண்ணு! பெரியவர் : பயப்படாதேம்மா! கடவுள் காப்பாத்துவார். கருப்பாயி : அப்படித்தான் என்னண்ணு பண்ணிட்டான் என் பிள்ளை. ஏதோ காந்திக் கொடியை ஏந்தி வந்தே மாதரம்னு சொன்னுன், இதுக்கு இவ்வளவு யெரிய தண்டனையா? இப்படியா அடிக்கிறது? அவங்க புள்ளேக்குட்டிங்க உருப்படுமா? அவன்கள் வாழ் வான்களா? தெய்வமே!