பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வீர சுதந்திரம் (இரண்டு போலீஸ்காரர்களுடன் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிரு.ர். கலங்கியழும் குமரனின் தாயைப் பார்த்து) இன்ஸ் : உங்களுக்கு இங்கென்ன வேலை: கலாட்டா பண்ணிங்க, உங்களையும் லாக்கப்பிலே தள்ளி விடுவேன்; ஜாக்ரதை, டாக்டர் (வருகிருர்) என்ன இன்ஸ்பெக்டர் மிஸ்டர் முக மது என்ன? இது ஆஸ்பத்திரி உங்க போலிஸ் ஸ்டேஷன் இல்லை. உங்க அதிகாரம் ஆர்ப்பாட்டம் எல்லா இங்கே வேண்டாம். போகலாம். (குமரனின் தாயிடம் அம்மா! நீங்க அப்படி போயிருங்க. நான் அப்புறம் உங்களைக் கூப்பிடறேன். இன்ஸ் : டாக்டர் சார்,டாக்டர் சார். அடிபட்டு சிகிச்சை பெறும் குமரன்.சுந்தரம்-ராமன் மூன்று பேரும் பயங் கரவாதிகள். அவர்கள் கைதி செய்யப்பட்டவர்கள். சட்டப்படி அவர்களுக்கு விலங்கு போட்டு-போலீஸ் பாரா கொடுக்கணும். டாக்டர் : மிஸ்டர் இன்ஸ்பெக்டர் உயர்ந்த உத்தியோ கத்திலே இருக்கிறவங்களுக்கு புத்தி மாத்திரம் இருந்தா போதாதய்யா! கொஞ்சம் மனித இதயமும் இருக்கணும். இன்ஸ் : டாக்டர். கவர்ன்மெண்ட் கடமையைச் செய்ய வந்துள்ளேன். கைதிகளுக்கு விலங்கு போடணும் - L00 سL- L-9 [5ی|دائی டாக்டர் : பேஷ் விலங்குப் போடணுமா? இந்த விலங்கை யாருக்குப் போடப் போறிங்க! அவங்க உடம்பிலே கட்டுப் போடவே இடமில்லை. அப்படி