பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 25 காலம் : இரவு. இடம் : ஆஸ்பத்திரியில் படுக்கை அறை. நிகழ்ச்சி : திருப்பூர் குமரன் உயிர் பிரிதல். பாதிரங்கள் : குமரன், ராமன், சுதந்திரம், டாக்டர், குமரனின் தாய், இன்ஸ்பெக்டர், நர்ஸ், போலீஸ் காரர்கள் முதலியோர். |ஆஸ்பத்திரி படுக்கையறையில் குமரன் அடிபட்டுக் கிடக்கிருன்) குமரன் : என் கொடி எங்கே? கொடி எங்கே வந்தே மாதரம். வந்தேமாதரம் வாழ்க மணிக்கொடி, வாழ்க... டாக்டர் : குமரா! கொடி வேனுமாப்பா? இதோ, இதோ. (டாக்டர் ஒரு கொடியைக் கொண்டு வந்து கொடுக் கிருர். அதைப் பிடித்துக் கொண்டே வந்தே மாதரம்-வாழ்க மணிக்கொடி என்று சொல்லிக் கொண்டே உயிர் விடுகிருன்) ராமன் : குமரா போய்விட்டாயா! குமரா போய் விட்டாயா? எங்களையெல்லாம் விட்டுப் போய் விட்டாயா? தியாகப் பரிட்சையில் நீ எங்களையெல் லாம் முக்திவிட்டாயப்பா? (டாக்டரிடம்) டாக்டர். (குமரன் தாயிடம்) அம்மா, மாவீரனைப் பெற்ற தாயே! உங்கள் மகனைப் பறிகொடுத்துவிட்டிர்கள்'