பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 26 காலம் : அந்தி மால்ை இடம் : திருப்பூரில் சுடுகாட்டு வழி நிகழ்ச்சி : திருப்பூர்க் குமரனை அடக்கம் செய்தல் பாத்திரங்கள் : திருப்பூர் குமரன் பூ உடல். மற்றவர்கள். (திருப்பூர்க் குமரனின் உடலே ஒரு பாடையில் கிடத்தி அமைதியாக நடந்து செல்கின்றனர். வெள்ளைத் திரையில் இதை நிழற்காட்சியாகக் காண்பிக்க வேண்டும்.) பின்னணி : காம் கிழலில் காணும் இந்தக் கொடுமை யான காட்சி கற்பனைச் சம்பவமல்ல. 1932 ஜனவரி மாதம் 11-ந்தேதி திருப்பூரில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சி. அன்று ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கோரக் கைகளால் தாக்குண்டு மடிந்த தேச பக்தன் திருப்பூர் குமரனின் உடலை அடக்கம் செய்வதற்குக் கூட முடியாத ஒரு கிலையில் இந்தியா இருண்டு கிடந்தது. காலச்சக்கரம் சுழல்கிறது. இந்தியனே உனக்கு மானமுள்ள விடுதலை வேண்டுமானுல் உன் கடமையைச் செய். இல்லையேல் செத்து மடி என்று 1942-ல் காந்திமகான் என்ற காலக் கதிரவன் நமக் குக் கட்டளையிட்டது. நேதாஜியின் இந்திய தேசீய ராணுவம் எதிரியை நெருக்கியது. பம்பாயில் கடற் படை வெள்ளேயர்க்கு எதிராகக் கலகம் செய்தது.