பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வீர சுதந்திரம் எல்லோரும் : ஆஹாஹா. சுகமான வழி! கத்தியா : இப்படி ஒரு திட்டத்தை இந்த காட்டிலே இது வரைக்கும் எந்தத் தலைவனுவது சொல்லியிருக்கான? உத்தியா : இதுவரைக்கும் எந்தக் குடிமகனும் சொல்ல இல்லை! இனிமேல் எப்படியோ? கத்தி : இந்த இயக்கத்தையே உங்க தலைமேலேதான் - கடத்தனும்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம். சோணு : அய்யய்யோ, என் தசிலமேலேயா? வேண்டாம். மூவரும் : இல்லை! இல்லை! நீங்கதான் இருக்கனும் சோணு : வேண்டாம்; வேண்டாம். கத்தி : ஐயோ! பக்தர்கள் ಛgLಶಿಖuTಶಿನ7 கம்பியிருக்கிற மாதிரி உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கோம். சோணு : வேண்டாங்க, வேண்டாங்க. கத்தி : ஏங்க, தலைவர் ரொம்ப மறுக்கிருரே... அப்ப... வேறு யாரையாவது தலைவராப் போட்டுடலாமே! கத்தி : ஏங்க, தலைவராயிருக்கிறதுக்குப் பயப்படறிங் களா? இல்லை, கூச்சப்படlங்களா? சோணு : நானெல்லாம் தலைவன இருக்கணும்னு வெட் கமா இருக்கு என்னமோ வெக்கமா இருக்கு... கத்தியா : நீங்க ஏங்க வெட்கப்படனும்? நீங்க தலைவரா இருப்பதைப் பார்த்து இந்த நாடு வெட்கப்படட்டும்.