பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வீர சுதந்திரம் கந்த என்ன மிஸ்டர் சோணுசலம். பாம்புக்குப் பாலே யும் ஊத்தனும் அது கடிக்க வந்தா, அதை அடிக்க வும் கூடாது. உம். அதுதானே உங்க எண்ணம்? சோணு : இதைப் பாரு தம்பி, நான் எவ்வளவு பெரிய மனுஷன் தோத்துப் போனு, என் கெளரவமே போயி டுமே! கந்த அப்போ உங்க கெளரவத்தை இந்தக் காகித நோட்டாலே காப்பாத்திக்கப் பாக்கிறீங்க? அப்படித் தானே? அட பேப்பர் மனுஷா! சோணு : உலகமே இந்தப் பேப்பர்லேதாம்பா கடக்குது. சர்வம் பேப்பர் மயம் ஜகத். கந்த '. காசுக்கு ஆசைப்பட்டு மணிக்கு ஒரு கொள்கை /மாறும் மடையனிடம் இந்தக் காசைக் கொடும். அவன் உமக்குத் தாளம் போடுவான்! நீர் சொல்ற படி நடனமும் ஆடுவான். சோணு : இது கள்ளப் பணம் இல்லை தம்பி, வெள்ளைப் பணம். - கந்த இல்லை! கொள்ளைப் பணம். அரசாங்க கிர்வாகத் தையே நிலைகுலைய வைத்து, நாட்டின் பொருளாதா ரத்தையே நலிய வைத்து, ஏழை எளியவர்களே காச மாக்கும் நாசப்பணம். தேவைக்கு மீறி மனிதனிடம் இருக்கும் பணம் திருட்டுப்பணம் என்று மகாத்மா கூறியது எவ்வளவு உண்மை என்று இப்பொழுது தான் புரிகிறது. நீங்களெல்லாம் மனம் மாறுவீர்கள் என்றுதான் பணத்துக்குத் தர்மகர்த்தாவாக இருக் கச் சொன்னர் அண்ணல் காந்தி. சோணு : அப்படின்:ை