பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 193 சத்தி : ஒரு காலத்திலே ஏழை! கந்த : இப்போ... சத்தி : மது நீரியல் வாரியத் தலைவன் முகில் பாரி வள்ளல். கந்த : சீ, கோழைப்பயலே! எதையோ கொடுத்து என்னைக் கெடுத்துட்டே போ! போயிடு. சத்தி : கெட்டதுதான் கெட்டே! முழுக்கக் கெட்டு டலாம் வா. வாலிபனப்பா நீ வாழ்க்கையை அனு பவி குடி! எலும்பைக்கடி! யாரையாவது பிடி பணம் வந்தா கொள்ளை அடி அப்புறம் பார் எல்லாப்பயல், களும்.உனக்கு அடிமை ஆயிடுவாங்க இல்லே நீயும் எங்கமாதிரி ஆயிட்டே, பயப்படாதே. காந்தியம் என்ற கவசம் இருக்கு...உன்னைக் காப்பாத்தும். அதனுலே நீ எங்களைவிடப் பெரிய மனுஷன் ஆயிட்டே. வாழ்க பெரிய மனிதர் காந்தியத்தைப் பேசிகிட்டே காரியத்தைப் பாரு இந்த நாடு வெறும் கோஷம் போடறவங்களே, வேஷம் போடறவங்களைத் தான் ரசிக்குது நீயும் அதையே செய்-உம்தலைவனுகும் தகுதி உனக்குப் பூரணமாக இருக்கு: பிடி என் ஆசீர்வாதம்! மகாத்மா காந்தி வாழ்க! கந்த : பேசாதே. ஆயிரம் பாவம் பண்ணு. ஆனல் அந்த உத்தமன் பேரை மட்டும் உன் வாயால்... கத்தி : அட நீ ஒன்னு...அவர் பேருதாம்பா சர்வரோக சஞ்சீவி, மகாத்மா வாழ்க! மதுவாத்மா வாழ்க! தம்பி அந்த அயோக்யன், காந்தி சிலையை வச்சிருக்கான். அதை வெடி வச்சு உடைச்சுத் தள்ளு காந்திக்கு சிலை பிடிக்காது! வீ. சு.-13