பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வீர சுதந்திரம் கந்தசாமி : பேஷ்! என்அய்யன் பேசிவிட்டான். மகாத்மா பேசி விட்டார். இனி வீம்புகாரர்கள் சிலை வைத்து இந்த காட்டில் விளையாட முடியாது. போலிகள் வேஷம் போட முடியாது. வில்லர்கள் மக்களுக்கு விஷத்தை ஊட்ட முடியாது! சூழ்ச்சிக்காரர்கள் உன் நிழலில் சூதாட முடியாது மகாத்மாவின் பெயரால் மாலே போட்டுக் கொள்ளமுடியாது! விடுதலை! ஆம் விடுதலை! எனதப்பன் வாய்மைக்கு விடுதலை போலி களின் பொய்மைக்கு விடுதலை! இந்தச் சிலை என்ற சிறையில் மறைந்துவிட்ட ஜீவனுக்கு விடுதலை! இந்தச் சிலையை வைத்து அதன் புகழின் நிழலிலே பஞ்சமாபாதகம் செய்யும் பாவிகளின் சூழ்ச்சிகளுக்கு விடுதலை. என் அய்யனது இமாலயக் கீர்த்தியைச் சிறைபடுத்திச் சீரழிக்கும் இந்தச் சிலை என்னும் சிறை-து.ாள் துாளாக, ஆயிரம் துகளாகி வெடித்துச் சிதறட்டும்! அந்தப் பாவிகளின் மனம் துடித்துப் பதறட்டும். திருடர்களின் கூட்டம் அடிபட்டு மறை யட்டும் குருடர்களாகி விட்ட மக்களின் மனம் புது ஒளி பெறட்டும்! (கையில் இருந்த இரண்டு வெடியில் ஒன்றை எரியப் போகிருன். அச்சமயத்தில் ஆசிரியர் உள்ளி ருந்தே கந்தசாமி கந்தசாமி என்று கதறிவண் ணம் ஓடி வருகிரு.ர். பதட்டத்துடன் கந்தசாமி வருவது யாரென்றும் தெரியாமல் வெடி குண்டை எரிகிருன். வெடிக்கிறது! சிலை சேத மடைகிறது! தூள்பறக்றகிது! அதனல் ஆசிரியர் கொஞ்சம் அடிபட்டுக் காயத்துடனும் நெற்றி யில் சிறு காயம்பட்ட இரத்தத்துடனும் மேடைக்கு வருகிரு.ர். வந்து துணிச்சலோடு காந்திசிலை முன் இருகை நீட்டி, சிலையைக் காப் பாற்ற நின்று)