பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 201 ஆசிரியர் : தம்பி! நீ ஆயிரம் சமாதானம் சொல்லலாம். நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். நீ செய்த காரியம் வெறுப்பில் வந்த விளைவு. வியாதியின்மேல் கோபித்துக் கொண்டு டாக்டரைப் பழிவாங்கும் பைத்தியக்காரத்தனம் செய்ய இருந்தாய். மகாத்மா யார் .ஊமைகளாயிருந்தோம். ஒட்டுரிமை தந்தார் அடிமைகளாயிருந்தோம். அமைச்சர்களாக்கினர். மண்ணுடை பூண்டு மக்கிக் கிடந்தோம். பொன்னுடை பூணும் புலவர்களாக்கினர். பொய்மை யின் போலிகளாயிருந்தோம். மெய்மையின் ஜோதி களாக்கினர். நமக்கென்று ஒரு நாடு.நமக்கென்று ஒரு கொடி-படை குடி-அமைச்சு-கட்பு-அரண் இவற்றைச் சுதந்திரச் செல்வமாகச் சேமித்து வைத் தார் மகாத்மா. அவர் கம் குடும்பத்தின் தாய். தந்தை நல்லாசான். நண்பன். அரசன். அமைச்சன்! அவர் தான் அண்ணல் மகாத்மா. கருணை எனும் பெருங் குணம், காந்தி வடிவம் கொண்டது. சத்தியம் என்னும் ஒளி, சாந்தப் புன்னகை பூத்தது. சேவையே பாதமாக, செம்மையே கைகளாக, உறுதி யெனும் கோலூன்றி, வழிகடந்து காட்டினர். அய்யன். நன்றி மறந்துவிட்டோம் கந்தசாமி : இனி மறக்கமாட்டேனய்யா. அய்யா என்னுல் உங்கள் நெற்றியிலே காயம். வாருங்கள் போகலாம். ஆசிரியர் : இது சிறு காயமப்பா. ஆறிவிடும், ஆனல் உன் செயலால் என் மனதிலே ஏற்பட்ட காயத்தை யாரப்பா ஆற்றுவது? சோணு : பாவிப் பய. இன்ரேம் சிலை பூராவும் உடைஞ் சிருந்தான எங்ககெளரவம் மதிப்பு எல்லாமே தூள்