பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வீர சுதந்திரம் துTளாயிருக்குமே. பத்தாயிரம் இருபதாயிரம், கன் கொடை கொடுத்த எங்க பேர் எல்லாம் கொட்டையா எழுதியிருக்குது. அதெல்லாம்கூட வீனப்போயிருக் குமே. நல்லவேளை. வாத்தியாரய்யா வந்து எங்க நல்ல பேரைக் காப்பாத்தினிங்க, நீங்க கல்லா இருக்கனும் ஆசிரியர் : அட சட். பேசாமருலிங்கள் அய்யா! வயிற் றெரிச்சலைக் கிளப்புகிறிர்கள். நீங்கள்தான் இதற் கெல்லாம் காரணம். கந்தசாமி, நீ செய்ய இருந்த குற்றம் எவ்வளவு கொடுமையானது தெரியுமா? அன்று கோட்சே செய்த கொடுமையைவிடக் கொடுர மானது. என் ஆத்மாவே நடுங்கும் கொடுமையான காரியத்தை அரை கொடியில் செய்ய இருந்தாய். தம்பி! இதைப் பார்க்கும் என் கண்கள் பாவம் செய்தது. நான் இனி இந்த ஊரில் உயிர் வாழ்வது கூடப் பாவம். அண்ணலே! என் மாணவன் செய்ய இருந்த குற்றத்திற்காக என்னை மன்னித்துவிடு. உன் சிலையை உடைக்க கினைத்தது அவன் குற்ற மல்ல. அவனுக்கு உன்னைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய முறையில், விளக்கிச் சொல்லாதது எங்கள் குற்றம். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவன் பாவத்துக்கு என்னை மன்னித்துவிடு. கந்த : (அவரைப் பிடித்து) அய்யா இந்தப் பாவிகள் மேலிருந்த கோபத்தில் இப்படிச் செய்துவிட்டேன். இனி இப்படிச் செய்யமாட்டேன். மன்னிக்க வேண்டும் சார், ஆசிரியர் : தம்பி, தோனப்பா என்னே மன்னிக்க வேண்டும். குற்றம் என்னுடையதப்பா. விடுதலை