பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வீர சுதந்திரம் உறுதியாகச் சொற்கள் உச்சரிக்கப்படல் வேண்டும்.) - குரல்-1 இருபதாம் நூற்றண்டின் ஆரம்ப காலம்... புண்ணிய பாரதநாடு ஆங்கிலேயர்களுக்கு அடி மைப்பட்டிருந்த இருண்ட காலம்! இந்தியன் என் ருல், கூலி வேலை செய்யும் அனுதை என்ற உலகத் தார் எண்ணத் தொடங்கிய காலம் அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் மண்டிக் கிடந்த அந்தத் துயர காட்களிலே...உயிரைத் துச்ச மென எண்ணி எழுந்தனர் விடுதலைச் சிங்கங்கள்... குரல்-2: மேற்கே-மராட்டிய மாநிலத்தில் மாவீரர் பாலகங்காதர திலகர் சுதந்திர இயக்கத்திற்கு வழி வகுத்தார். சுதந்திரம் எமது பிறப்புரிமை-அதை அடைந்தே தீருவோம்’ என்று சிம்ம கர்ஜனை செய்தார். - - ,,------يم--د குரல்-1 : கிழக்கே-வங்க மாநிலத்தில் அறிஞர் கோமான் அரவிந்த கோஷ், பிபின் சந்திரபால் போன்ற மேதைகள் வீரத்துடன் சுதந்திரப் போர்க்களம் 336ðÜTL-GỌI ff., குரல்-2 : வடக்கே-பஞ்சாப் பெருகிலத்தில் ஞானப் பெருந்தகை லாலா லஜபதிராய்! அஞ்சாத சிங்க மென சுதந்திரப் போருக்கு அணிவகுத்தார். தள்ளாத வயதில் தளகர்த்தராக கின்று தன்னுயிர் நீத்தார். குரல் 1 : தெற்கே-கன்னித் தமிழ்நாட்டில் கப்ப லோட்டிய தமிழன் வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை,