பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் மடாதிபதிங்க எல்லாம் எங்கள் பக்கம். நீங்க் மாத்திரம் தனியா என்ன பண்ண முடியும்: நீங்களும் எங்க பக்கம் சேர்ந்துடுங்க. உங்களுக்கு ராஜாங்கத்திலே சொல்லி, பெரிய அட்வகேட் ஜெனரல் பதவி வாங்கித் தர்றேன். வ. உ. சி. : என்ன? விஞ்ச் ஆமாம், அட்வகேட் ஜெனரல் ஆப் மெட்ராஸ் பிரசிடென்சி. ரொம்ப ரொம்ப பெரிய பதவி. என்ன! வெரி குட், சரி மெளனம் சம்மதம், சரி வாங்க. இனி நாம் நண்பர்கள். கை கொடுங்க வ. உ. சி. கொஞ்சம் பொறுங்கள். பதவி என்னும் மாய வலைக்கு அகப்படும் தீயவிலங்கல்ல என் உள்ளம் என்ன மிஸ்டர் விஞ்ச் வந்ததும் கர்ஜனை செய்தீர், இப்போது கைகுலுக்க வருகிறீர். முதலில் பய முறுத்தினரீர். இப்போது ஆசை காட்டி மோசம் செய்கிறீர். கேவலம் பட்டம் பதவிக்காகத் தேசத் துரோகம் செய்யும் பேடிப் பயல்களிடம் இப்படிப் பேசும் என்னிடம் பேசாதீர். தேசபக்தர்களைத் தடி யால் அடிக்கிறீர். தேசத் துரோகிகளைப் பணத்தால் அடிக்கிறீர். தலைவர்களைக் கேவலம் பதவியால் அடிக்கப் பார்க்கிறீர்! மிஸ்டர் விஞ்ச் சற்றுமுன் தான் மரியாதையைப் பற்றிப் பேசினிர் ஜாக்ரதை! யார் முன்னின்று, என்ன பேசுகிருேம் என்று கன்ருக நான்குமுறை எண்ணிப் பார்த்து, வார்த் தையை எண்ணிப் பேசும். எமது இதயத்துள்ளே இலங்கும் தேசபக்தி என்ற எரிமலையைக் கேவலம் உனது பதவி எனும் பழைய காகிதத்தைப் போட்டு மூடிவிடலாம் என்று எண்ணுதே உலே வாயுை