பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - வீர சுதந்திரம் வ. உ. சி. இல்லை. அகம்பாவத்தை அழிக்கச் சொன் னேன். இறுமாப்பை இறக்கச் சொன்னேன். விஞ்ச் : உம். பல தடவை எச்சரிக்கை செய்தேன். தடை யுத்தரவு போட்டேன், கேக்கலே! கேக்கமாட்டே! வ. உ. சி. தடையுத்தரவு! (சிரித்து) காட்டாற்று வெள்ளத்தைக் கையால் தடுக்கமாட்டான் புத்தி சாலி! விஞ்ச் : அவமானம்! வ. உ. சி. அதுவே உமது ஆட்சிக்கு நாம் தரும் வெகு மானம்! ~. - விஞ்ச் : பேசாதே! வ. உ. சி. :பேச வைக்கிருய்! விஞ்ச் செஞ்சதும் குத்தம் செய்யறதும் குத்தம் எல் லாமே குத்தம்-குததம்! வ. உ. சி. எம் தேசபக்தி என்ற சத்யதர்மத்திற்கு நீர் தரும் பெயர் குற்றமென்றல், அந்தக் குற்றத்தை, முபபது கோடி மக்களும் முன்னுள்று கேடி முறை செய்துகொண்டே இருப்போம். விஞ்ச் : பாலிடிக்ஸ் இஸ் தி கேம் ஆப் ஸ்கவுன்ட்ரல்ஸ்! வ. உ. சி. கோ பேட்ரியாடிஸம் இஸ் தி டுட்டி ஆப் ஏ ரியல் மேன், : விஞ்ச் : இதெல்லாம்விட மற்ருெரு மாபெரும் குத்தம் செஞ்சிருக்கே? - -