பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 39 வ. உ. சி. : அதென்னய்யா அது மாபெரும் குற்றம்? சும்மா பயப்படாமல் சொல். விஞ்ச் : வங்காளத்திலே புரட்சி செஞ்ச அந்த வந்தே மாதரம் என்ற கோஷத்தை ஜனங்ககிட்டே சொல்றே; சொல்லிக் கொடுத்திருக்கே. ஆ! வந்தே மாதரம் டேன்ஜரஸ் கோஷம்! வ. உ. சி : வந்தே|மாதரம் அருமையான ஒரு வார்த்தை அதைக் கண்டு நீர் ஏனய்யா பயப்படுகிறீர்? எம்மைப் பெற்ற தாயே! அம்மா பாரதியே! உனக்கு வந்தனம் என்கிருேம். இதில் என்னய்யா பெரிய பயங்கரத்தைப் பார்த்து விட்டீர்? உம்மைப் போன்ற வொரு டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் பங்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காளத்தில் எழுதிய பாட்டுத்தானே இது? விஞ்ச் : இஸ் இட்? அப்படியா? வ. உ. சி. ஆம். வந்தேமாதரம் அதுவே எங்கள் தாரக மந்திரம் இந்த காட்டின் கடைசி தேசபக்தன் உயிர் பிரியும் வரை, அவன் உடல் வெந்து கருகிச் சாம்ப லாகும்வரை இப் புனித மந்திரம் முழங்கிக் கொண்டே இருக்கும் வந்தே மாதரம்! விஞ்ச் : ஷட் அப் ஷட் அப்! வ. உ. சி : வந்தேமாதரம்! விஞ்ச் ஆ! வந்தேமாதரம் செடிஷன்: கான்ஸ்பிரஸி