பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5 காலம் : இரவு. இடம் செங்கோட்டையில் வாஞ்சி விட்டின் மாடிப் பகுதி. - நிகழ்ச்சி : வாஞ்சி தன் மனைவியிடமிருந்து விடைபெறு தல். பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், பொன்னம்மாள். (வாஞ்சிநாதன் ஏதோ ஒரு முக்கியமான புத்த கத்தைத் தேடி விட்டு, புத்தகம் இல்லாதிப்பது கண்டு,] வாஞ்சி : பொன்னம்மா! பொன்னம்மா பொன்னம்மா செவிட்டுப் பொன்னம்மா. பொன்னம்மா : என்னவாம்? (உள்ளியிருந்து பொன்னம்மாள் வருகிருள்) வாஞ்சி : ஆமா. பிரெஞ்சுப் புரட்சியைப் பத்தி எழுதின ஒரு புத்தகம் வச்சிருந்தேனே, அது எங்கே? பொன்னம்மா ஓ! அந்தப் பழைய புத்தகமா வாஞ்சி. ஆமா. அ துதான் பிரெஞ்சுப் புரட்சி. பொன்னம்மா : அது ரொம்பப் பழசா போச்சேன்னு அடுப்புலே வச்சு எரிச்சுட்டேன்.