பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 55 பேடிக்கும் ரோசம் வர்ற மாதிரிப் பேசறே அரசியல் ஆவேசத்தை அப்படி அள்ளித் தெளிச்சூட்டே? பொன்னம்மா : அரசியலும் இல்லே, மண்ணுங்கட்டியும் இல்லே. ஏதோ நான் கேள்விப்பட்டதைச் சொன் னேன். அது கெடக்கட்டும். வாஞ்சி ; உண்மையிலேயே ரொம்ப வீரமா பேசறே: பொன்னு! - பொன்னம்மா : நான் யாரு? வாஞ்சி : யாரு? பொன்னம்மா : மாவீரரின் மனைவி, உங்க ஆத்துக்காரி இல்லியோ! சரி. கொஞ்சம் கிம்மதியா துரங்குங்க. கீழே அத்தைக்கு ஒரே காய்ச்சல். மருந்து கொடுக்க ணும். என்ன? கண்னெல்லாம் கோவைப்பழம் மாதிரி செவந்திருக்கு. அடேயப்பா நேரம் போனதே தெரியல்லை. எவ்வளவு கழியாச்சு உம், துங்குங்க வாஞ்சி : துருக்கமா? முயற்சி பண்ணிப் பாக்கறேன். (பொன்னம்மா கீழே போகிருள். வாஞ்சி ஏதோ தனது குறிப்பேட்டில் எழுதிப் படிக்கிருன் நள்ளிரவு வந்து விடுகிறது. பின்னணியில் நீலாம் புரி இசை கேட்க இமை மூடுகிருன் உட்கார்ந்த படியே. சற்று நேரம் கழித்து) தண்ணிர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்-கருகத்திருவுளமோ' மேலோர்கள் வெஞ்சிறையில் வாடித் தவிப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலேயோ?