பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 7 காலம் : மாலை. இடம் : பொதிய மலைச்சாரலில் ஒரு சிறிய குகை-சிறு காளிகோயில். நிகழ்ச்சி : தேச வீரர்கள் சபதமிடுதல், ஆஷ் துரை யைக் கொல்ல வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப் படுதல். பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரன், நீல கண்ட பிரமச்சாரி, மற்றும் பலர். எல்லோரும் : ஜெய் மகாகாளி. மாடசாமி : இதைப் பார்த்தீங்களா? நம் தலைவர் சிதம்பரம் அய்யாவுக்குப் போட்ட ஜென்ம தண்டனையை பெரிய கோர்ட்டும் ஊர்ஜிதமாக் கிட்டுது; தலைவர் சிவத்தைச் சித்ரவதை பன ருங்க! நாலு காள் பிரசங்கம் பண்ணினதுக்கு நாற்பது வருடம் கடுங்காவல தண்டனை! வெறி நாயை விரட்டுவதுபோல் என் இன போலீஸ் துரத்துது; என்னைப் பார்த்த இடத்தில் சுட்டுப் பொசுக்கும்படி உத்தரவு போட்டிருக்கு வாஞ்சி : இனியும் காலத்தை வீணுக்குவது முட்டாள் தனம்; நமது மக்களை வேட்டையாடத் துணிந்த இந்த வெள்ளே வெறி நாய்களைக் கண்ட இடத்தில் அடித்துக்கொல்வதே நமது வேலை. தாயே பராசக்தி நாங்கள் உன்னே வேறென்றும் கேட்கவில்லை; செல்வத்தைக் கேட்கவில்லை: சுகபோகங்களைக்