பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 71 கேட்கவில்லை; நீண்ட ஆயுளைக் கொடு என்று கோரவில்லை; இன்பத்தைக் கோரவில்லை; இப் புண்ணிய பாரத நாட்டை வாட்டி வதைக்கம் அன்னிய ஆட்சியை வெல்லும் வல்லமையை மட்டும் கொடு தாயே! அதற்கு வேண்டிய மனே திடத்தை-வீர வைராக்கியத்தை எங்களுக்குக் கொடு தாயே! தாய் காட்டின் விடுதலைக்காக எத் தகைய பயங்கரத் துன்பத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும் துணிச்சலை எங்களுக்குக் கொடு தாயே கொடு. நீலகண்ட பிரம்மச்சாரி : (வந்து) நண்பர்களே. சங்கரன் : யாரது? வாஞ்சி : அண்ணு நீலகண்ட பிரம்மச்சாரி. நீலகண்ட : (சிரிப்பு) ஏன் இவ்வளவு பதட்டம்? மாடசாமி : பதருமல் இருப்பது எப்படி அய்யா கம் தலைவர்கள் சிறையில்; என் தாய் இறந்து விட்டாள். கவலைப்படாமல் எப்படி அய்யா இருப்பது? நீலகண்ட : (சிரித்து) சிறையும் சுடுகாடும் வீரர்களின் விளையாட்டு மேடைகள் தம்பி. சுதந்திரதேவி தியாகிகளுக்குக் கட்டி வைத்த திருக்கோயில்கள் ♔ത് மாடசாமி : இன்னும் எங்கள் கையைக் கட்டி வைக்கா தீங்க, இனிமேல் அமைதியா இருக்கிறதிலே அர்த்தமில்லை.