பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வீர சுதந்திரம் வாஞ்சி : கொடுமையின் சூடு தீரக் குளிர்மலைக்குப் போகிருரு கொலைகாரன்? மாடசாமி : ஆம்; எமன் அங்கிருந்து அவனே அழைக் கிருன், சுதந்திரத்தின் சின்னமான நம் சுதேசிக் கப்பல்-கம்பெனியை காசமாக்கிய நயவஞ்சகன்! நமது இயக்கத்திற்கு முதல் பலியாக வேண்டியவன் அந்தக் கலெக்டர் ஆஷ். வாஞ்சி ஆம். இம்முறை எப்படியும் பழி தீர்த்தே ஆக வேண்டும். இந்த வேலையை நானே முடிக் கிறேன். தலைவர் வ. உ. சி. செக்கிழுக்கவும், வீரர் சிவம் சித்ரவதை அனுபவிக்கவும், சுதேசிக் கப்பல் அழியவும், ஆயிரமாயிரம் தேசபக்தர்கள் பரதேசி கள் போல் அலைந்து வாடிச் சாகவும், காரணமான அக்த அரக்கனைக்காலனிடம் அனுப்பும் பொறுப்பை என்னிடம் ஒப்படையுங்கள். ஒரு வீரர் . இல்லை; நான்தான் போக வேண்டும். சங்கரன் : வேண்டாம். அவனே என்னிடம் விட்டு விடுங்கள். மாடசாமி : எல்லோரும் இந்த மாடசாமியை மறந்தே பேசுகிறீர்கள். உத்திரவு கொடுங்கள் அய்யா! நீலகண்ட தம்பி, இது மரணத்தோடு விளையாடும் பயங்கர விளையாட்டு. அன்னை, யாருக்கு உத்தர விடுகிருளோ அவனே இந்தப் பெரும் பணியைச் செய்யத் தகுதி வாய்ந்தவன். உம், சீட்டெழுதுங் கள். அன்னையிடம் கேட்போம். எல்லோரும் ஆம், அதுதான் சரி.