பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதத்திரம் 75 வாஞ்சி சரி. சங்கரன் : இதோ காகிதம் எழுதுங்கள். நீலகண்ட : ஜெய் மகாகாளி. எல்லோரும் : ஜெய் மகாகாளி: சங்கரன் : வாஞ்சி! எங்களில் தோன் இளைஞன். அன்னையை நன்ருகப் பிரார்த்தனை செய்துகொண்டு சீட்டை எடு தம்பி. - வாஞ்சி : ஒம் மகா காளி. (வாஞ்சி சீட்டை எடுக்கிருன், மாடசாமி அதை வாங்கி ஆவலோடு பிரித்துப் பார்க்கிருன். ஆளுல் வாஞ்சியின் பெயர் வந்துள்ளது.) மாடசாமி : ஆ வாஞ்சி! வாஞ்சி : ஆகா தாயே உனக்கு ஆயிரம் கோடி வந்தனம்: என் பிரார்த்தனையை கிறைவேற்றி விட்டாய். மாடசாமி , வாஞ்சி, நீயா? இந்த சமயத்தில் எல்லோரும் மேடையின் முன் பகுதிக்குப் பேசிக் கொண்டே வரவேண்டும்; பின்னணியில் ஒரு காட்டுப் படுதா விடுதல் வேண்டும்.) நீலகண்ட முடியாது. வாஞ்சிக்குப் பதில் நான் போகி றேன். பருவச் சோலையின் முதல் மலரைக்கூட நுகர்ந்தறியாதவன் வாஞ்சி.