பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 9 இடம் : பாண்டிச்சேரியில் ஒரு சோலை. பாத்திரங்கள் : பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர்' சி. ஐ. டி. கிட்டு. வைகறைவேளை குயிலோசையில் மனதைப்பறி கொடுத்து நிற்கிருர் பாரதி. அதை ரசித்த வண்ணம் பாரதி பேசுகிரு.ர்.) பாரதி : ஆ மனிதனை அமரனுக்கும் குயிலிசையே நீ வாழ்க! காட்டு கெடுவானம் கடல் எல்லாம் விந்தையெனில், பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! காட்டில் விலங்கறியும் கைக் குழந்தை தானறியும் பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்! (பிச்சைக்கார மாறுவேடத்தில் வந்த துப்பறியும் போலீஸ் கிட்டு.) சி. ஐ. டி. ஐயா! பசிக்குதய்யா! பிச்சை போடுங்கய்யா! பாரதி : யாரடா அவன்? காலையில் பிச்சை கேட்கிருன்? |மாறுவேடத்தில் இருக்கும் துப்பறியும் போலீலை கொஞ்சம் உற்றுக் கவனித்து) வீ. சு.-6