பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வீர சுதந்திரம் அடே! நீ இந்த காட்டு மன்னனடா! மன்னன் பிச்சை எடுக்கக் கூடாது! கண்ணியமா வாழனும்! கையேந்தக் கூடாது! அதோ பார் வானில் குயில் பாடுகிறது. அதைக கேளடா அழியும் மனிதனே! அமரகீதத்தைக் கேள்! அறிவிலே தெளிவு வரும்: ஆனந்தம் கிடைக்கும். சி. ஐ. டி. : உம் கிடைக்கும்! கிடைக்கும்! வயித்துப் பசி காதை அடைக்குது பாட்டு எப்படிங்க கேக்கும்? பாவம் குயிலும் பசி தாங்காமல்தான் கத்துது போலிருக்கு. அதை நீங்க கீதம்நாதனும்னு கவிபாட றிங்க காசு, கீசு இருந்தா கொடுங்க. பாரதி : என்ன துணிச்சலடா உனக்கு என்னைப் பார்த்து காசு கேட்கிருய்! தமிழ்க் கவிஞன்தானே இவனிடம் காசு எப்படி இருக்கும் என்று சோதிக் கிருயா? அடே இந்தப் பாரதி கொடுக்கும் கவிஞனடா, எதையும் எடுக்கும் கவிஞன் அல்ல... (சட்டைப்பையில் இருந்த சில்லரையை எடுத்து அவனுக்குக் கொடுத்து இந்தா சில்லரை எடுத் துக் கொள் போய்விடு) சி. ஐ. டி. ஐயா கொஞ்சம் இந்த பாண்டிச்சேரி எல்லே யைத் தாண்டி வாங்கய்யா! பாரதி : எல்லா எல்லைகளையும் தாண்டிய கவிஞனடா நான்! எங்கே அழைக்கிருய்? சி. ஐ. டி : அதோ அங்கே இருக்கிற குப்பத்துக்குப் பக்கத்துலே என் குடிசை இருக்குது அங்கே என் குழந்தை குட்டி எல்லாம் பட்டினிக் கிடக்குது!