பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 89 வாகப் பாடு தம்பி, வயலிலே வேலை செய்யும் உழவர் பெருமக்கள் முதல் வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக் கும் கூலிச்சிறுபயல்கள் வரை காட் டு ண ர் வு கொண்டு வீறு கொண்டு ஏறுநடை போடும்படி உன் சாரத்தமிழில் பாடு தம்பி பாடு! அர ; மஹா கவியே! நமது காட்டு மக்கள் அவ்வளவு விரைவில் உணர்வு பெற்று விடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் கினைப்பதுபோல் இந்த நாட்டுக்கு அவ்வளவு விரைவில் சுதந்திரம் வரும் என்று கருதுகிறீர்களா? எனக்கு என்னவோ இன்னும் நம்பிக்கை வரவில்லை. பாரதி : என்ன! வீர அரவிந்தரே! தங்களுக்கா இந்த சந்தேகம். பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை கடுநடுங்க வைத்த தாங்களா இப்படிப் பேசுவது? தாகம் தீருமா என்று கங்கா நதி சந்தேகப் படலாமா அய்யா? ஜோதி வருமா என்று சூரியன் சந்தேகப்படுவ துண்டா அய்யா? என்னைப் பொறுத்தவரை ஐயமே இல்லை அய்யா! நான் தங்களைப் பார்ப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயம் இந்த காடு சுதந்திரம் பெறப் போவது உறுதி சத்தியம்! இல்லையேல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் துரக்கில் மாண்ட தியாகிகளும், செய்த தியாகம் எல்லாம் அர்த்தமற்ற செயலாகிவிடும். இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தால் உலகில் தர்மம் மீண்டும் எழுந்து விட்டது என்று அர்த்தம். நீதி பிழைத்து விட்டது என்று பொருள்! உறங்கிக் கிடந்த பாரதம் விழித்தெழுந்து விட்டது. இனி இதை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடி யாது! ஒராயிரம் வருடம் உறங்கிக் கிடந்த பாரத சக்தி உற்சாகம் கொண்டு வீறு கடை போடத்