பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வீர சுதந்திரம் துவங்கி விட்டது! உங்களையும், தம்பி கனகசுப்பு ரத்தினத்தையும் பார்ப்பதுபோல பாரத காட்டின் சுதந்திரத்தை என் கண் முன்னே இன்றே, இப் போதே இக்கணமே காண்கிறேன். பாரதி : பாரத சுதந்திரத்திற்காக நமது பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், இந்தத் தள்ளாத வயதில் காடு கடத்தப்பட்டு அமெரிக்காவில் தனிமையில் வாடு கிருர் காடிழந்து மக்களையும் ந ல் லு, ற ைவ த் தானிழந்து வீடிழந்து உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர்? சுதந்திரதேவி சீக்கிரம் வந்துவிடு.இல்லையேல் எனக்கே உன்மேல் சந்தேகம் வந்து விடும்! பாரதிதாசன் : அ ப்யா தாங்கள் இரண்டு காளாக சாப்பிடவில்லை. உடம்பும் சரியில்லை. பாரதி : உள்ளம் சரியில்லை. பசி தெரியவில்லை. சரி கான் வருகிறேன். பாரதிதாசன் : அய்யா! உங்களுக்குத் தெரியாதா? பாரதி : என்ன? பாரதிதாசன் : உங்கள் குவளைக் கண்ணனுக்கு ஏகப் பட்ட காய்ச்சல். ஆபத்தான நிலையில் படுத்திருக் கிருன். - பாரதி : ஆ! குவளைக் கண்ணன்! என் குழந்தை' காய்ச்சலா? பாரதிதாசன் : ஆம். பாரதி : சரி, அவனைப் பார்த்தபின் கோவை போகலாம். டாரதிதாசன் : ஆமாம். அப்படியே செய்வோம். இப்போது வீட்டுக்குப் போவோம். வாருங்கள். காட்சி முடிவு