பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 10 காலம் : 1915-16 இடம் : அமெரிக்காவில்-நியூயார்க் நகரில் ஒரிடம் நிகழ்ச்சி : லாலா லஜபதிராய், எம். என். ராய் சந்திப்பு பாத்திரங்கள் : லாலா லஜபதிராய், (வயது சுமார் 60) எம். என். ராய். |லாலாஜி ஒரிடத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டே பாடுவது போலக் காட்டலாம். அதன் பின் நிம்மதி இல்லாமல் எழுந்து உலாவிய வண்ணம் தமது உள்ளக் குமுறலைப் பின் வரும் பாட்டால் வெளியிடுகிருர் நீலவானத் திரையிலே அன்னை நாட்டின் அழகு வதனத்தைக் காணுகிரு.ர். அல்லது பாடல்களின் வரிகளில் உள்ள பாத்திரங்களைக் காட்டலாம்) எத்தனை ஜென்மங்கள் இருட்சிறையில் இட்டாலும் என் தத்துபுனல் பாஞ்சாலந்தனில் வைத்தால் வாடுகிலேன் தொண்டுபட்டு வாடுமென்றன் துய திருநாட்டில் கொண்டுவிட்டு என்னேயுடன் கொன்ருலும் இன்புறுவேன்' லாலா , அன்னேயே! உன்னே என்று காண்பேன். பாவம் என்ன மக்கள் பாடுபடுகிருர்களோ கான் எனக்காக வருந்தவில்லையம்மா. அடிமைப் பிணியிலே அவதிப் படும் உன்னரும் மக்கள் வாழ்வின் உதயத்தைக் காணும் நாள் என்று வரும் தாயே! இந்த உலகில் நீதியும் தர்மமும் கிரந்தரமாகவே அஸ்தமனமாகி விட்டதா அம்மா. - -