உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெண்பூ மனம் 2002.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரூ.3000 பரிசு பெற்ற
பவள விழா முத்திரைக் குட்டிச் சிறுகதை

மகள் வாசம்

னைவியின் தலைப்பிரசவம். தப்புதண்டா இல்லாம, நல்லபடியா முடியணுமே என்ற உளைச்சல்... என்ன பிள்ளை பிறக்குமோ என்ற திகில். ‘பொம்பளைப் புள்ளை பொறந்தா... நல்லது...’ எனக்குள் ஆசை. செத்துப்போன அம்மா நினைப்பு. அம்மாவே புள்ளையா வந்து பொறக்கணும். கவுன் போட்ட அரும்பு. பாவாடைப்பூ. தாவணிச் செடி.

வீட்டுக்குள்ளிலிருந்து வெளிப்பட்ட பெண்ணிடமிருந்து சோகமான ஒரு குரல். “பானைஞ்சு பவுன் நகைக்கு வழியைப் பாருங்க. உங்க தலையெழுத்து பொம்பளைப் புள்ளைதான்...”

எனக்குள் விசிலடிக்கிற மனம். ரெக்கைக் கட்டிப் பறக்கிற குதூகலம். ‘அம்மா வந்துட்டா’ பாசநெகிழ்வில் பரபரக்கிற நான்.

கடைக்கு ஓடினேன். பெப்பர் மிட்டாய் பாக்கெட் வாங்கி, உடைத்து தெருவில் வந்த ஆள், போன ஆள் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்தேன், மகிழ்ச்சிக் கூத்தாட்டமாக.

“என்ன முட்டாய்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெண்பூ_மனம்_2002.pdf/178&oldid=1829694" இலிருந்து மீள்விக்கப்பட்டது