பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

ஜேம்ஸ் ஆலன்


நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றது. எனவே, நாம் அவர்களுடன் உணர்ச்சிப் பிணைப்புடையவர்களாகி விடுகின்றோம். அவர்கள் துன்புறும்போது அந்த நோவை நாமும் உணருகின்றோம். அவர்கள் களிப்புடனிருக்கும் போது அவர்களுடன் நாமும், மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்கள் ஏளனத்திற்கும், தொல்லைக்கும் உள்ளாகும் போது நாம் உணர்ச்சியளவில் அவர்களுடன் ஆழ்ந்து படிந்து அவர்களுடைய தாழ்வுணர்ச்சிகளையும், துயரங்களையும் நம் இதயங்களில் ஏற்றுக்கொள்கின்றோம். பிணைத்து, ஒருமைப்படுத்துகின்ற இரக்கமெனம் உணர்ச்சியுடைய எவனும் சீறி விழுவதும், பழிப்பதுமான செயல்களுடையவானாக என்றுமே இருக்க மாட்டான். அவன் தன் கூட்டாளிகளைக் குறித்துச் சிந்தனையற்ற, கொடுமையான கருத்துகளை என்றுமே வெளியிடமாட்டான். ஏனெனின் இவனுடைய உள்ளத்தின் மெல்லிய இயல்பு காரணமானக அவர்களுடைய துன்பத்தின்போது இவன் அவர்களுடனேயே இருப்பவனாகின்றான்.

துன்பங்கள் சூழ்ந்த மனிதனாகத் துயருடன் தொடர்பு கொள்ளாத எம் மனிதனும் உண்மையான இரக்கம் கொண்டிருக்கமுடியாது. ஆனால், அத் துன்பமும், துயரமும் மறைந்து போயிருக்கவேண்டும். அஃதாவது நிலையான அன்பாகவும், வழக்கமான அமைதியாகவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வாழ்க்கைப் போக்கிலும் உண்மையான இரக்கச் சிந்தையுடைய மனிதர் இருந்து வருகின்றனர் எனும் உண்மையைக் கண்டு களிப்படைகையில், கடுமை,