பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 102


பல்வகைப் படுவனவாகவும் இருக்கின்றன.

இரக்கம் என்னும் இப் பெரிய அறத்தை நால்வகைக் குணங்கள் உருவாக்குகின்றன. அவை;

1. அன்பு 3. படிமானம்
2. பெருந்தன்மை 4. நுண்புலம்

ன்பு முழு வளர்ச்சியடைகின்ற போது, அது தோன்றி மறையும் உணர்ச்சி வேகமன்று, நிலைபெற்ற குணமேயாகும். பெரும்பாலும் அன்பெனும் பெயரில் அழைக்கப்டுவதாயினும், இடையிடையே தோன்றி மறைவதும், நம்பக்கூடாததுமான உணர்ச்சி அன்பாகாது. புகழுரையைப் பழிப்புரை பின் தொடர்வதாயின் புகழுரையிலே அன்பே இல்லை. இயல்பாயெழுகின்ற கொஞ்சுதலைத் தூண்டுவதாகத் தோன்றுகின்ற அன்பு இயல்பாயெழுகின்ற வெறுப்புடனும் தொடர்பு கொண்டிருப்பின் அந்த அன்பு சிறிதளவே கருத்திற் கொள்ளற்பாலதாகும்.

நன்கொடை தருபவன் பின்பு அதன் மதிப்பீடு தனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டுமென்று விரும்புவானேயானால், மேம்பட்டதாகத் தோன்றிய பல நன்கொடையும் தன் மதிப்பை இழந்துவிடும். ஒருவன் தனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும் ஏதேனும் வெளிப்புறத் தூண்டுதல் காரணமாய் மற்ற ஒருவனுக்கு அன்பு செய்தற்பொருட்டுத் தன் உணர்ச்சிகளை எழுச்சியுறச் செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு அவனுக்கு வெறுப்புண்டு பண்ணுகின்ற ஏதேனுமொரு வெளிப்புற