பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

ஜேம்ஸ் ஆலன்




பெறுவதைப் போன்றே வழங்குவதும் அத்துணை சிறப்பான ஒரு கடமையாகும். தன்னால் இயன்ற அளவு பெறக் கூடியவை அனைத்தையும் பெற்றுவிட்டு, வழங்க மறுப்பவன் இறுதியில் பெறமுடியாத நிலையடைந்து விடுவான். ஏனெனின், நாம் பெறக்கூட வில்லையெனின் நாம் வழங்க முடியாதவாறு போல, நாம் வழங்கவில்லையென்றால் நாம் பெற முடியாது என்பதும் ஓர் ஆன்மீக விதி.

வழங்குவது என்பது மேன்மையானது. இன்றியமையானது. ஒரு கடமை என்றே சமய ஆசிரியர்கள் அனைவராலும் எப்போதும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன? தன்னைப்பொறுத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான தலையாய வழிகளில் ஒன்று வழங்குதலாகும். மேலும், மேலும் மேம்பாடும் தன்னலத் துறவை நாம் அடைதற்கும், தன்னலத்திற்குத் திரும்பவும் வீழ்ச்சியடைந்து விடுவதைத் தடுத்தற்குமான கருவி அதுவே. உடன் வாழும் மக்களுடன் நமக்குள்ள வாழ்வு சார்ந்ததும், சமூகஞ் சார்ந்ததுமான உறவை நாம் உணர்ந்து, பிறருடைய நன்மைக்காகவும், நன்னிலைக்காகவும் நமது தேட்டத்திலிருந்தோ உடைமையிலிருந்தோ ஒரு பகுதியை இழக்கச் சித்தமாயிருக்கின்றோம் என்பதை அது குறிப்பாலுணர்த்துகின்றது. எத்துணை மிகுதியாகப் பெறினும், பின்னும் மிகுதியாக வேண்டுமெனப் பசி கொள்பவனும், கொடுமையான விலங்கொன்று தன் இரையைப் பற்றிக் கொண்டிருத்தல் போன்று, திரண்டு வரும் சேமிப்பின் மீதுள்ள தனது பிடியைத் தளர்த்த