பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

ஜேம்ஸ் ஆலன்


தன்மையைனாகின்றான். மிகுதியான அனுபவத்தின் மீதும், உயர்ந்த ஒழுக்கத்தின் மூலமுமே அதைப் பெற முடியும். தன்னுடைய விலங்கின இச்சைகளைக் கட்டுப்படுத்தி அவற்றை அடக்கியாளுகின்றபோதுதான் அஃது ஒருவனிதயத்தில் நிலைபேறு கொள்கின்றது. மெல்லோசையுடைய தெளிவான குரல், தனிக்குறிப்புடையதாக, உறுதியுடையதாகயிருப்பினும் அமைதியாக விளக்கிக் கூறும் பாங்கு, குறிப்பாக இக் கட்டான சூழ்நிலைகளில் பரபரப்பு, உணர்ச்சிமேலிடு, சினம் இவற்றிலிருந்து விடுபட்டிருத்தல் ஆகியவையே அதன் வெளிப்புற அடையாளங்களாகும்.

பண்புடைமைய அறிவுடைமையோடு இணைக்கப் பெற்றிருப்பதாகும். அறிவுடைய மனிதன் தன்னிடமுள்ள சினம் அனைத்தையும் வென்றுவிட்டவனாவான். எனவே, பிறரிடம் அதை எவ்வாறு வெற்றிகாண வேண்டும் என்பதை அவன் புரிந்து கொள்கின்றான். கட்டுப்பாடற்ற மனிதர் தம்மைத்தாம் உட்படுத்திக் கொள்கின்ற தடுமாற்றம், தொந்தரைகள் பலவற்றிலிருந்து பண்டைய மனிதன் காப்பாற்றப்பட்டவனாகின்றான். அவர்கள் பயனற்றதும், தேவையற்றதுமான கடுமை தம்மைத் தாம் களைப்புறச் செய்துகொள்ளும் வேளையில், இவன் அமைதியுடனும், தன்னிறைவுடனுமிருக்கின்றான்; வாழ்வுப்போரில் அத்தகைய அமைதியும், தன்னிறையும் வலுவுற்றனவாகும்.

நுண்புலம் இரக்கத்தின் இயல்திறனாகும். இரக்கமான மனமே ஆழ்ந்து உணர்ந்தறிகின்ற மனம். நாம் நுகர்வறிவால் புரிந்துகொள்கிறோமே அன்றி,