பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

ஜேம்ஸ் ஆலன்


பரத்தை இவர்களாக ஆகியே விட்டார். அவர்கள் எந்நிலையிலிருந்தனரோ அதோ நிலையில் இவருமிருந்தார். இவர் அவர்களுடைய தனிப்பட்ட பட்டறிவுகளுக்குள் புகுந்து, அவர்கள் தம்மைத்தாம் அறிந்து கொண்டிருந்ததைவிடச் சிறப்பாக இவர் அவர்களை அறிந்து கொண்டார். ஷேக்ஸ்பியருக்கு ஒருதலைச் சார்போ, ஒறுப்போ கிடையாது; மிகத் தாழ்ந்தவர் முதல் மிக உயர்ந்தவர் வரையில் இவருடைய இரக்கம் அனைவரையும் அரவணைக்கின்றது.

இரக்கத்திற்கும், அறிவிற்கும் பெருந்தடையாக இருப்பது தப்பெண்ணமே. தப்பெண்ணம் கொண் டிருப்பவரை ஒருவன் தானே புரிந்து கொள்ளுதல் இயலாது. அரைகுறையான தீர்ப்புகளை நம் உள்ளங்களினின்றும் அப்புறப்படுத்துகின்றதேபாது தான் மக்களையும், பொருள்களையும் உள்ளவாறே நாம் காண முடியும். நாம் இரக்கமுடையவர்களாக ஆகும் போதோ உண்மை. பார்வையுடையவர்களாகவும் ஆகின்றோம். இரக்கம் அறிவைத் தனது தோழனாக கொண்டிருக்கின்றது.

உணருகின்ற நெஞ்சமும், காணுகின்ற கண்ணும் இணைபிரியாதனவாகும். இரக்கமுள்ள மனிதன் வருவதுரைக்கும் திறமுள்ள அறிவனாவான். நெஞ்சங்கள் அனைத்துடனும் இயைந்து துடிக்கின்ற உள்ளமுடையோனுக்கு அவ் உள்ளங்களின் எண்ணங்கள் அனைத்தும் புலனாகின்றன. மேலும், இரக்கமுள்ள மனிதனுக்கு இறந்தகாலமும், எதிர்காலமும் கண்டறிய முடியாத மறை புதிராக ஒருபோதும் இருப்பதில்லை.