பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 112


படுமானால் சமுதாயம் வீழச்சியுற்றுச் சிதறிப் போகும் என எமர்சன் குறிப்பிடுகிறார். ஏனெனில் மக்கள் ஒருவரையொருவர் நம்பி வாழவேண்டும் என்பதற்கு இந்த நம்பிக்கை முறையே ஓர் அறிவிப்பாகத் திகழ்கிறது. அனைத்து மோசடியும், வஞ்சனையுமாகும் என்று குறுகிய நோக்குடையோராலும், அறிவிலிகளாலும் பொதுவாகக் கருதப்படுகின்ற வாணிபமும், பிறவும் ஒருபெரும் நம்பிக்கையின் அடிப்படையிலிருந்தே தோன்றுகின்றது. மனிதர் தம் கடமைகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றி விடுவர் என்னும் நம்பிக்கையே யாகும். பொருள்களைத் தந்து ஒப்படைப்பது வரையில் கட்டணம் கேட்கப்படுவதில்லை. பன்னெடுங் காலங்களாக இந்த முறை நடைமுறையிலிருக்கும் உண்மை. பெரும்பான்மையான மனிதர் தம்முடைய கடன்களைத் திருப்பித்தரவே செய்கின்றனர் என்பதுடன், அவ்வாறு கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் விருப்பமுமில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

மனித சமூகம் அதன் குறைபாடுகள் அனைத்திற்கும் அடியில் உண்மையென்னும் வலுவுள்ள அடி நிலையிலேயே நிலைபெற்றிருக்கின்றது. அதன் அடிநிலை இசைவு இயல்பார்வமேயாகும். மிகயுர்ந்த இயர்பார்வம் கொண்ட மக்கள் அனைவரும் அதன் பெருந்தலைகளாவர்; அவர்களின் பெயர்களும், அவர்கள் பெற்ற பேறுகளும் அழிந்துவிட அனுமதிக்கப்படுவதில்லை; இயல்பார்வம் என்னும் அறம் மக்களினம் அனைத்தாலும் பாராட்டப்படுவதற்கு இதுவே சான்று.