பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 116


நன்மையை, தகுதியில்லாதன வற்றினின்றும் தகுதியுள்ளனவற்றை, பொய்ம்மையினின்றும் மெய்மையைப் பகுத்துப் பின்னதை முனைப்பார்வமுடன் காத்துக் காப்பாற்றவும், முன்னதை அழிந்துபட விட்டுவிடவும் செய்கின்ற அளவிற்கு அத்துணை நிறைவானதாகும்.

மேம்பட்ட மனிதரின் பணிகள், சொற்கள், செயல்கள் இவை மனித இன மரபுரிமைகளாகும். மனித இனம் இவற்றின் பயனைக் குறித்துக் கவனமற்றிருப்பதில்லை. ஒரு நூலை ஆயிரம் மனிதர் எழுதுகின்றனர். ஒன்றே ஒன்றுதான் தோற்றுவாய்த் திறனுடைய படைப்பாகவிருக்கின்றது. எனினும், அந்த ஒன்றை மனித இனம் தனியாகப் பொறுக்கி எடுத்துப் போற்றிப் பேணிக் காக்கின்றது. அதே வேளையில் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது சார்பெழுத்தாளர்களை வெறுமையாக்கி விடுகின்றது. ஒரே வகையான சூழ்நிலையில் பத்தாயிரம் மக்கள் ஒரு தொடரைக் கூறுகின்றனர்; அவற்றில் ஒன்றே ஒன்றுதான் அறிவொளியுடையதாக இருக்கின்றது; எனினும், பின் மரபினருக்கு வழி காட்டுவதற்காக மனித இனம் அந்த ஒன்றைமட்டும் தனியாகப் பொறுக்கி எடுக்கின்றது; அதே போது, பிற தொடர்கள் பின்பு கேட்கப்படுவதே இல்லை.

தூய்மையான நாணயம் மனிதர் அனைவரிடையேயும் புழங்கி அதன் பெறுமானத்திற்காக மதிக்கப்படுகின்ற வேளையில், போலிநாணயம் கண்டு பிடிக்கப்பட்டு உலோக முருக்கும் பானையில் எறிந்து விடப்படுதல் போன்று, போலியான சொல்லோ, செயலோ குணவியல்போ