பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

ஜேம்ஸ் ஆலன்


உணர்ந்தறியப்பட்டு, உண்மையற்ற, ஆற்றலற்ற, இறந்துபட்ட ஒரு பொருளாக அது தோன்றிய வெறுமையில் வீழ்ந்து மடிய விடப்படுகின்றது.

அரும்பொருள் தொகுதியாயினும் சரி, மனிதராயினும் சரி, போலிப் பொருள்களுக்கு மதிப்பில்லை. உண்மையான பண்டமாகத் தேர்வுபெற முயலுகின்ற போலிப் பொருள்களைக் கண்டு நாம் வெட்கமுறுகின்றோம். போலித்தன்மை இழிவானது. ஏமாற்றித் திரிபவன் ஒரு வசைச்சொல்லுக்கு ஆளாகிவிடுகின்றான். அவன் மற்ற மனிதரைவிட அருகதை குறைந்தவன். அவன் ஒரு நிழல், பொய், முகமூடி. உண்மைப் பான்மை மதிப்பிற்குரியது. நல்லுள்ளம் கொண்ட மனிதன் ஓர் எடுத்துக் காட்டாகிவிடுகின்றான். அவன் ஏனைய மனிதரைவிட அருகதை மிகுந்தவன்; அவன் ஒரு மெய்ம்மை. ஆற்றல், உருவமைப்பு அறம், போலித்தன்மையால் அனைத்தும் அழிந்துவிடுகின்றன. தனித்தன்மை கூடத் தேய்ந்து மறைந்து விடுகின்றது. ஏனெனின், போலித் தன்மை, வெறுமை, உண்மைப்பான்மையால் ஒவ்வொன்றும் பெறப்படுகின்றது. உண்மைப்பான்மை உறுதியானது, நிலையானது, மெய்யானது.

போலித்தனங்களாலும், பொய்த் தோற்றங்களாலும் வெற்றிகரமான வாழ்க்கைப் போக்கை உருவாக்கிவிட முடியுமென எம் மனிதனாகிலும் எண்ணுவானேயாயின், நிழல்கள் என்னும் ஆழ்ந்த குழிக்குள் அவன் அமிழ்ந்து விடுவதற்கு முன் தயக்கங் கொள்ளட்டும். ஏனெனின் இயல்பார்வமின்மையில் வன்மையான நிலத்தளம்