பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 120


சென்று கொண்டிருக்கின்றது. பெருந் திறமையாளர்களாக இருக்கும் மக்கள் தமது இயற்கையான எளிமையின் காரணமாகவே அத்தகைமையினராய் இருக்கின்றனர். அவர்கள் பாசாங்கு செய்வதில்லை; இயல்பாக இருக்கின்றனர். சிறுமதி மனங்கொண்டோரே நாகரிகம் கற்று நடைமுறைப் படுத்துகின்றனர். உலக மேடையில் கவர்ச்சியுடைய ஓர் ஆளாகத்தோன்ற அவர்கள் விரும்புகின்றனர்; திருநிலை இல்லா அவ் விருப்பத்தால் அவர்கள் மட்டமான நிலைக்கே உந்தித் தள்ளப்படுகின்றனர்.

தன் ஆய்வுப் பண்பும், ஒழுக்க ஆற்றல்களும் தன்னிடம் கொண்டு, எளிமைக்கு மீளுவதிலேயே ஒரு மனிதன் மேன்மையடைகின்றான். மெய்யான எதையுமே அவன் இழப்பதில்லை. குணவியல்பென்னும் தங்கத்தைப் புலப்படுத்தும் வகையில் கள்ளத்தனங்கள் மட்டுமே களைந்தெறியப்படுகின்றன. மெய்யார்வம் எங்குள்ளதோ அங்கு எப்போதும் எளிமையும் இருக்கும். அதாவது, நாம் இயற்கையில் காண்பதுபோன்ற எளிமை, மெய்ம்மையின் எழில் சேரும் எளிமை அங்கிருக்கும்.

கவர்ச்சி எளிமையின் நேரடி விளைவாகும். நாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளபடி இயற்கைப் பொருள்கள் அனைத்திலும் கவர்ச்சியைச் செல்வாக்காக வெளிப்படுகின்றது. கவர்ச்சியுடையோராய் கருதப்பட வேண்டுமெனத் துடிப்போர் அவ்வாறு ஆதலும் அரிது.

ஏனெனின், அவருடைய தற்செருக்கே அதற்கொரு தடையாகும். கவர்ச்சியுடையோராய்க் கருதப்பட