பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 122



மனிதரிடையேயுள்ள தலைவர்கள் தமது மெய்மை ஆற்றலாலேயே பிறரைக் கவருகின்றனர் அவர்களுடைய கவர்ச்சிச் செல்வாக்கின் அளவே அவர்களுடைய மெய்யார்வத்தின் அளவாகும்.

மெய்யார்வமுடைய மக்கள் தம் திறமைக் கூறு, தம் சிறப்பாற்றல், தம் அறப்பாங்கு, தம் அழகு இவற்றைக் குறித்து நினைப்பதேயில்லை. அவர்கள் தம்மைக் குறித்து முனைப்புணர்வு இல்லாதோராயிருப்பதாலேயே, அனைவரையும் கவருவதுடன் அவர்களின் நம்பிக்கை, அன்பு, மதிப்பு இவற்றையும் பெற்றுக் கொள்கின்றனர்.

மதிநுட்பம் மெய்யார்வமுடையோர்க்கு உரித்தானது. அவர்கள் முன்னிலையில் பாசாங்குகள் அனைத்தும் வெளிப்பட்டு விடுகின்றன. மெய்யார்வமுடைய மனிதனின் ஆய்ந்துணருங் கண்ணிற்குப் பாசாங்குக்காரர்கள் அனைவரும் தெளிவாகப் புலப்பட்டுகிடுகின்றனர்.

மனிதர் இயற்கைப் பொருள்களைக் கண்ணுற்ற வேளையிலேயே, அது பாம்பு, பறவை, குதிரை, மரம், மல்லிகை எனத் தவறின்றிப் பிரித்துணர்தல் போன்று மெய்யார்வமுடைய மனிதன் பல்வகைக் குணவியல்பு களையும் பகுத்துணருகின்றான். ஓர் அசைவில், ஒரு பார்வையில், ஒரு சொல்லில், ஒரு செயலில் மனிதனின் இயல்பை அவன் அறிந்து அதற்குத் தக நடந்து கொள்கின்றான். ஐயப்பாட்டிற்கு இடமின்றி அவன் பாதுகாப்புடன் இருந்து கொள்கின்றான். அவ நம்பிக்கைக்கு ஆளாகாமல் அவன் பாசாங்குக்காரனுக்காக ஆயத்தமாக இருக்கின்றான். மக்கள் அவனிடம் ஒளிவு