பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

ஜேம்ஸ் ஆலன்


மறைவின்றிப் பழகுகின்றனர்; அவன் அவர்களின் மனநிலைகளைக் கற்றறிந்து விடுகின்றான். அவனுடைய நுட்பமான தீர்ப்பு செயல்களின் மையத்திற்கே ஊடுருவிச் சென்று அவை இருக்கின்றவாறே அவற்றுடன் தொடர்பு கொள்ள வழி செய்கின்றது. நேரடியான, தெளிவான அவனுடைய நடத்தை பிறரிடத்து நன்மையை வலுப்படுத்துகின்றது. தீயோரை இழிவுபடுத்துகின்றது, நெஞ்சத்திலும் சிந்தனையிலும் அவன் கொண்டிருக்கின்ற நிறைவுடைமையை இன்னும் பெறாதோர்க்கு அவன் வலிமையூட்டும் ஓர் ஊன்று கோலாகவும் இருக்கின்றான்.

ஆற்றல் மதிநுட்பத்தோடு இணைந்தே செல்லுகின்றது. செயல்களின் தன்மையைப் புரிந்து கொள்ளும் நிலையானது, செயல்கள் அனைத்தையும் நேர்மையான சிறப்புடைய வழியில் எதிர்ப்பட்டு ஈடுபாடு கொள்ளும் ஆற்றலுடன் இணைந்தே வருகின்றது. எப்போதும் அறிவே ஆற்றலாகும். ஆனால், செயல்களின் தன்மையைப் பொறுத்து அறிவு தலைசிறந்த ஆற்றலாகும். அதனைக் கொண்டிருப்போன் நெஞ்சங்கள் அனைத்திற்கும் ஓர் ஆற்றலாக விடுவதுடன், அவற்றின் செயல்களை நன்மையான வகையில் திருப்பியும் விடுகின்றான். அவனுடைய உடல் மறைந்த நெடு நாள்களுக்குப் பின்பும், அவன், பின்னும் நன்மைகளை உருவாக்கும் ஆற்றலாக இருந்து வருகின்றான். மக்களின் மனங்களில் நுட்பமாக இயங்கி விழுமிய பயன்களுக்காக அவர்களை உருவாக்கும் மெய்ம்மையாக இருந்து வருகின்றான். முதலில் அவனுடைய ஆற்றல் ஓரிடத்திற்குரியதாயும், வரையறைக்குட்பட்டதாயுமே இருக்கின்றது. ஆனால்,