பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

ஜேம்ஸ் ஆலன்


உண்மைகளைக் கூட அவன் காணாதவாறு தடுக்கின்ற ஒரு வகையான மயக்கத்தில் நடமாடுபவனாகி விடுகின்றான். அதே வேளையில், வழக்கமாகவே ஏறத்தாழ ஆதாரமற்றதாகவே இருக்கின்ற அவனுடைய சொந்தக் கோட்பாடுகள் அவனுடைய மனத்தில் வலி மீறிய அளவிற்கு இடம் பெறுகின்றன. ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு வழியே உண்டென்றும், தான் கருதுவதே அவ் வழி என்றும் பற்று மிகுதியால் அவன் கருதுகின்றான். ஒவ்வொன்றிற்கும் குறைந்தது இரு வழிகளேனும் உள்ளன. அவ் இரு வழிகளையும் பரபரப்பினின்றும் நீங்கியவனாய், ஒன்றை மற்றொன்று மேலோச்சி நிற்க வேண்டும் என்ற விருப்பமின்றியும் கவனமாக ஆராய்பவனே அச் சங்கதியின் உண்மையைக் காணுபவனாவான்.

உலகின்கண்ணுள்ள வேறுபாடுகளையும், மாறுபட்ட கருத்துகளையும் பொறுத்த அளவில் உலகம் ஒரு வழக்கை எதிர்வாதிடுகின்ற இரு வழக்கறிஞர்களைப் போன்றதாகும். குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் தமது பக்கத்தை மெய்யெனக் காட்டுதற்கு வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றார்; அதே வேளையில், எதிர்வாத வழக்குரைஞர் தமது வாதத்திற்கு ஆதாரமாயிருப்பவை அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றார். அவர்களிருவரும் ஒருவருக்கெதிராக ஒருவர் காட்டிய நிகழ்ச்சிகளைச் சிறுமைப்படுத்தவோ புறக்கணிக்கவோ, காரணங் காட்டி மறுக்கவோ செய்கின்றனர். எவ்வாறெனினும், வழக்கின் நீதிபதி மக்கள் நடுவேயுள்ள ஒரு தலைச்சார்பற்ற சிந்தனை-