பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 130


யாளரைப் போன்றவராகும். அவர் இரு தரப்பிலுமுள்ள சான்றுகள் அனைத்தையும் செவிமடுத்து, நீதி வழங்குதற் பொருட்டு ஒருதலைச் சார்பற்ற ஒரு குறிப்புரையை உருவாக்கும் வகைளில் அவற்றை ஒப்பிட்டு ஆராய்கின்றார்.

நடுநிலையுடைய ஒரு மனிதன் தப்பெண்ணத்திலிருந்தும், விருப்பு, வெறுப்புகளினின்றும் விடுதலை பெற்றுக் கூர்ந்தாராய்கின்றான். சீர்தூக்கி மதிப்பிடுகின்றான்; சிந்திக்கின்றான். அவனுடைய ஒரே விருப்பம் மெய்ம்மையைக் கண்டு பிடித்தலேயாகும். கற்பிதமாக அவன் கொண்டிருந்த எண்ணங்களை அவன் நீக்கி விடுகின்றான். நிகழ்ச்சிகளும், சான்றுகளும் தம் கூற்றை எடுத்துரைக்க விட்டுவிடுகின்றான். அவன் சாதித்துக் காட்ட வேண்டுமென்று தனக்கென வழக்கெதுவும் வைத்திருப்பதில்லை. ஏனெனின், உண்மை மாற்றப்படவியலாதது, தன் கருத்துகள் அதற்கு வேற்றுமை கற்பிப்பதில்லை, அதைத் துருவித் தேடிக் கண்டுபிடிக்கக் கூடும் என்பதை அவன் அறிவான். அதன் காரணமாகப் பரபரப்பு மிக்க ஒருதலைச் சார்பிற்கு உள்ளாகின்ற பெருமளவு பண்பு முரண்பாடுகளினின்றும், நடுக்கத்தின் இழப்பினின்றும் அவன் தப்பிவிடுகின்றான். இதற்கும் மேலாத அவன் இயற்பொருளை நேருக்கு நேர் நோக்குகின்றான்; ஆகவே, தெளிவும் அமைதியும் உடையவனாகி விடுகின்றான்.

நடுவுநிலைச் சிந்தனையாளன் எங்கிருப்பினும் விலைவிலோ பின்னரோ உலகின் மதிப்பீட்டிலும், அதன்