பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

ஜேம்ஸ் ஆலன்



மனித இனம் அமிழ்ந்து கிடக்கின்ற இச்சையென்னும் கொந்தளிக்கும் நீர்ச்சுழிக்கு மேலே உண்மையான சிந்தனையாளன் வாழுகின்றான். தனிமுறைச் சார்புடைய நோக்கங்களினால் அவன் தள்ளாட்டம் கொள்வதில்லை. ஏனெனின், தனிச் சார்பற்ற நியதிகளின் சிறப்பை அவன் புரிந்து கொண்டிருக்கின்றான். எனவே, அகந்தையான இச்சைகள் மோதுகின்ற போரில் அவன் ஈடுபடாதவனாய் இருப்பதால், நடுநிலைக்குரிய சாதக நிலையிலிருந்து கருத்தற்ற பார்வையாளராகவும் இருந்து விடாமல், இருபுறமும் சமமாகக் காணுவதோடு, அப் போரின் காரணத்தையும் பொருளையும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.

உண்மையான சிந்தனையாளனே மனிதரில் மிக மேன்மையானவன். அவனுடைய ஊழே மிகவும் உயர்வுடையது. முற்றிலும் நடுநிலையான மனம் உயர் நிலையை அடைந்துவிட்டதாகும்; அது இயற்பொருளின் முழுமையான ஒளியில் பொலிகின்றது.

நடுநிலையின் பெரும் ஆக்கக் கூறுகள் நான்கு :

1. நீதி 3. அமைதி
2. பொறுமை 4. மெய்யறிவு

சமமான பெறுமதிகளைக் கொடுக்கலும், வாங்கலுமே நீதி. “கடினமான கொள்முதல் செய்தல்” என்றழைக்கப்படுவது ஒருவகைத் திருட்டேயாகும். கொள்முதல் செய்வோன் தன் கொள்முதல் பொருளின் ஒரு பகுதிக்கான விலையைக் கொடுத்துவிட்டு மீதத்தைத்