பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 134


தனியான ஆக்கத்தைத் தனதாக்கிக் கொள்வதையே அது குறிக்கும். பேரத்தை முடித்து விடுவதன் மூலம் விற்போனும் கூட இதற்கு ஊக்க மூட்டுபவனாவான்.

நேர்மையான மனிதன் விழுமம் மிஞ்சிய பலன் அடைய முயற்சி செய்வதில்லை. அவன் பொருள்களின் உண்மையான பெறுமதிகளை ஆராய்ந்து அதற்குப் பொருந்துமாறு தன் கொடுக்கல் வாங்கல்களை உருவாக்கிக் கொள்கின்றான். “எது ஆதாயமாயிருக்கும்” என்ற எண்ணம் “எது நேர்மையானது” என்ற எண்ணத்திற்கு முன்பாகத் தன்னிடத்தே தோன்ற அவன் இடந்தருவதில்லை. ஏனெனின், நேர்மையானதே இறுதியில் ஆதாயமாகவும் இருக்கும் என்பதை அவன் அறிவான். வேறு ஒருவனுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் தன் சொந்த நலனை அவன் நாடுவதில்லை. ஏனெனின், கொடுக்கல் வாங்கலில் தொடர்புற்ற இரு சாரார்க்கும் நேர்மையான செயல் சமமாகவும், முழுமையாகவும் நலந்தருகின்றது என்பதை அறிவான். “ஒரு மனிதனின் இழப்பு, இன்னொரு மனிதனின் ஆதாயமாக இருப்பின்”, அந்த வேறுபாடு பின்னர் ஈடு செய்யப்பட்டுவிடும் என்பதே அதன் குறிப்பு. நேர்மையற்ற ஆதாயங்கள் ஆக்கத்திற்கு வழிகாட்டாது.

தொழிலில் பேரம் பேசுகின்ற ஊக்கம், வாணிபத்தின் உண்மையான ஊக்கமன்று. அது ஒன்றுமில்லாததற்கு எதையேனும் பெறவேண்டுமென்ற தன்னலத் திருட்டூக்கமேயாகும். நேர்மையான மனிதன் பேரங்கள் அனைத்தையும் ஒழித்துத் தன்தொழிலைத்