பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

ஜேம்ஸ் ஆலன்


தூய்மைப்படுத்துகின்றான். மிகவும் சீர்மை வாய்ந்த நீதியின் அடிப்படையில் அதை அமைக்கின்றான். “ஒரு நல்ல சரக்கை” அதன் சரியான விலையில் அவன் கொடுக்கின்றான்; அதை மாற்றுவதில்லை. மோசடியால் கறைப்படுத்தப்பட்டுள்ள எந்தத் தொழிலினும் அவன் தன் கைகளைக் கறைப்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய சரக்குகள் தூய்மையானவை. அவை தக்கமுறையில் விலையிடப்பட்டுள்ளன.

பிற அனைத்திற்கும் மேலாக மனிதன் கஞ்சத்தனத்தை விட்டு, மேலும் மேலும் முழுமையான நேர்மையுடையவனாக இருக்க முயற்சி செய்யட்டும். ஏனெனின், நேர்மையில்லையெனின், அவன் நாணயமுடையவனாகவோ, பெருந்தன்மையுடையவனாகவோ ஆண்மையுடையவனாகவோ இருக்கவியலாது. ஆனால், அவன் தன்னாலியன்றது அனைத்தையும் பெறவும், எத்துணைச் சிறிதளவு இயலுமோ, அத்துணைச் சிறிதளவே திருப்பிக் கொடுக்கவும் முயற்சி செய்கின்ற ஒருவகை மறைமுகத் திருடனாகவே இருக்கின்றான். அவன் பேரங்கள் அனைத்தையும் விட்டொழிக்கட்டும். அதனோடு பேரளவானதும், பாராட்டிற்குரியதுமான வெற்றியை மேம்பட்ட தகுதியுடன் தொழிலை நடத்தும் சிறந்த வழியைப் பேரம் பேசுவோர்க்குக் கற்றுத் தரட்டும்.

நடுநிலையுடைய மனிதனின் குணவியல்பில் பொறுமையே ஒளிமிக்க அணியாகும். இஃது, ஒரு சிறுமி தனது பின்னல் வேலையில் கொண்டிருப்பதைப் போன்றதோ, ஒரு சிறுவன் தன் பொம்மை இயந்திரத்தை அமைப்பதில் கொண்டிருப்பதைப் போன்றதோ ஆன