பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 12



எந்த ஒரு சமூகத்திலும் நிலையாக ஆக்கஞ் சேர் மக்களாக இருப்போர் அச் சமூகத்திலுள்ள எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களுமல்லர். ஆனால், நம்பிக்கைக்கு உரியவராயிருப்போரும் நேர்மைக் குணம் படைத்த மக்களுமேயாவர். இந்திய சமூகத்தின் தமிழர்களே மிகவும் நேர்மை படைத்த மக்களாகக் கூறப்படுவர்; அவர்களின் மக்கள் தொகுதி சிறிதேயாயினும் அவர்களே அதிகமான பண்பாட்டுச் செழிப்புள்ளவர்கள்.

“வாணிபக் கட்டுமானம்” குறித்து மக்கள் பேசுகின்றனர்; செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு வீடு போன்றோ கருங்கல்லால் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் போன்றோ வாணிபமும் ஒரு கட்டிடமே; அவ்வாறிருப்பினும், அக் கட்டுமானப் படிமுறை மனம் சார்ந்ததாகும். வீட்டின் மேலுள்ள கூரைபோன்று ஆக்கம் மனிதனின் தலைக்குமேல் அமைந்து அவனுக்கு பாதுகாப்பும், ஆறுதலும் அளிக்கும் ஒரு கூரையாகும்; ஆதாரத்திற்கு ஓர் அடிநிலை இன்றியமையாததாகி விடுகின்றது. ஆகவே, ஆக்கம் எனும் கூரை கீழ்க்காணும் எட்டு ஆதாரங்களால் நிலைப்படுகின்றன; இவை ஒழுக்கத்திண்மை எனும் அடிநியிைல் பொருத்தப் பெற்றிருக்கின்றன.

1. ஆற்றல்  5. இரக்கம்
2. சிக்கனம்  6. இயல்பார்வம்
3. சால்பு  7. நடுவு நிலைமை