பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 146


இறுமாப்பு; அவற்றை இழந்துவிட்டால் அனைத்தையும் இழந்துவிடுவோம்.

நேர்மை, தூய்மை, மெய்யார்வம், குணவியல்பு, மெய்ம்மை ஆகிய தலையாய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதே தன்னம்பிக்கை; எதை இழப்பினும் அஃது ஒரு பொருட்டாகாது. ஏனெனின், இவை என்றுமே இழக்கப்படுவதில்லை. புறப் பகட்டாலும், தற்செருக்காலும் இறுமாப்பு தனது அறியாமையை மறைக்க முயலுகின்றது. அதனோடு எத் திசையிலும் தன்னை ஒரு மாணவனாகக் கருத விரும்புவதில்லை. விரைந்து செல்லும் சிறிய பொழுதிற்குள் அறியாமையிலும் பகட்டிலுமே நிலைகொள்கின்றது. இன்று எத்துணை உயர்வுக்கு அது உயர்த்தப்படுகின்றதோ, நாளை அத்துணைத் தாழ்விற்கு அது வீழ்த்தப்பட்டுவிடும். மறைக்கப்படவேண்டியது எதுவுமே தன்னம்பிக்கையிடம் இல்லை. அதனோடு கற்றுக் கொள்வதற்கும் விருப்பமுடையதாயிருக்கின்றது. தற்செருக்குள்ள இடத்தில் பணிவு இருக்க முடியாதபோது, தன்னம்பிக்கையும், பணிவும் ஒத்தியங்கக் கூடியனவாயிருக்கின்றன. ஏன், அதைவிடக் கூடுதலாக ஒன்றிற்கொன்று சார்புற இணைந்து கொள்ளுவனவாகும். அதனோடு விழுமிய தன்னம்பிக்கை ஆழ்ந்த அடக்கத்துடன் இணைந்திருப்பதையே காணலாம்.

“வீரத்தின் சாரம் தன்னம்பிக்கையேயாகும். மேன்