பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

ஜேம்ஸ் ஆலன்


மக்கள் அனைவரும் தற்சார்புடையவரே. நாம் அவர்களை ஆசிரியர்களாகவும், பின்பற்றத் தக்கவர்களாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, ஊன்றுகோல்களாகவும், உந்து ஆற்றலாகவும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. வேறு எவரையும் பற்றுக் கோடாகக் கொள்ளாது உண்மையின் தனித்த உயர்நிலையின் மீது தனியாக நிற்பவனே மேம்படு மனிதனான வருகின்றான். உடன்தானே உலகம் அவனைப் பற்றுக் கோடாகக் கொள்ளத் தொடங்கிவிடுகின்றது. ஆன்மீகச் சோர்விற்கும் கேடுதரும் தன் தாழ்விற்கும் அவனை ஒரு சாக்குப் போக்காகக் கொள்ளத் தொடங்கி விடுகின்றது; மேன்மக்களின் வலிமையில் நம் தீமைகளைத் தாலாட்டிக் கொள்வதைக் காட்டிலும், அவர்களுடைய ஒளிமிக்க விளக்கெதிரே நம் அறங்களுக்குப் புத்தொளி தருவதே சாலப் பொருந்துவதாகும். பிறருடைய ஒளியை நாம் நம்பியிருந்தால், இருள் நம்மைச் சூழ்ந்துவிடும். ஆனால், நாம் நமது ஒளியையே நம்பியிருப்பின் நாம் அதன் சுடரை வளர்த்தேயாக வேண்டும். நாம் பிறரிடமிருந்து ஒளியைப் பெறுவதும், மற்றவர்க்கு வழங்குவதுமாகிய இரண்டையுமே செய்யலாம். ஆனால், நமது சொந்த விளைக்கைப் புறக்கணித்துத் துருப்பிடிக்க விட்டுவிட்டுப் பிறருடைய ஒளியே போதுமெனக் கருதுவது நம்மை நாம் இருளில் கைவிடப்பட்டவர்களாவோம். என்றுமே நம்மைக் கைவிடாத ஒளி நமது சொந்த உள்ளொளியே.

தன்னம்பிக்கைக்குப் பிறிதொரு பெயராகிய