பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

ஜேம்ஸ் ஆலன்


4. முறைமை 8. தற்சார்பு

இந்த முறை அனைத்தையும் தவறாது கடைப்பிடித்தொழுகும் அளவிற்கு அத்துணை உறுதியானதாகவும், நீடித்து நிலைபெறுவதாகவும் அமைந்துவிடும். அதனின் ஆக்கத்தை எதுவும் நிலைகுலையச் செய்ய முடியாது; அதனின் வெற்றியை எதுவும் குறுக்கிட்டுத் தடுக்கவோ தரைமட்டத்திற்குக் கொண்டுவரவோ முடியாது. அதற்கு மாறாக, இந்தமுறைகளைப் பின்பற்றாத நிலை எங்குளதோ அங்கு எவ்விதமான வெற்றியும் ஏற்படுவதில்லை அங்குத் தொழிலேனும் இருக்க ஏதில்லை; எப்பொருளாயினும் அதற்கு உயிரூட்டி உடலும், உருவமும் கொடுக்கின்ற இயல்பும், திண்மையும் இல்லாத நிலையிருக்கும். இந்த முறைகளைத் தன் மனத்தே கொள்ளாதவனாய் ஒரு மனிதனைப் படம் பிடித்துப் பார்க்கும்போது, குறைகளைக் குறித்த நமது அறிவு சிறிதளவாயினும், நிறைவுநிலை பெறாதாயினும் எவ்வித வெற்றிகரமான பணியைச் செய்பவனாகவும் அம்மனிதனை நாம் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.

மிகுதியான அளவிலோ குறைந்த அளவிலோ இந்த முறைகளே எவ்வகையான வெற்றியாயினும், அவையனைத்திற்குமான காரணக் கூறுகளாகும். ஆக்கம் அனைத்துடையவும் அடித்தளத்தில் இவையே வலுவுள்ள ஆதாரங்களாய் இருக்கின்றன; அத்தகைய