பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 150




தன்னம்பிக்கையின் மேன்மையான நான்கு குணங்களாவன:

1. தீர்மானம் 3. சீர்மை
2. திண்மை 4. தன்னாண்மை

தீர்மானம் மனிதனை வலிமையுடையவானக்குகின்றது. தடுமாறுபவன் வலுவற்றவனேயாவான். வாழ்வெனும் நாடகத்தில் எத்துணைச் சிறியதாயினும் சிறப்பான பங்கை நடிக்க வேண்டிய மனிதன் தீர்மானமுடையவனாக இருப்பதோடு, தன் பகுதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும். அவன் செயல்படுதற்கான தன் ஆற்றலைக் குறித்து ஐயுறுதல் கூடாது. வாழ்வில் தன் பகுதி என்னவென்பதைத் தெரிந்து அதனில் தன் ஆற்றல் அனைத்தையும் செலுத்தவேண்டும். தான் செயற்படுதற்கும், பாதுகாப்பாக நிலைகொள்தற்கும் ஏதேனும் திண்ணமான அறிவுத் தளத்தை அவன் கொண்டிருக்க வேண்டும்.

தன்னம்பிக்கையின் கண் ஒரு பெரும் மூலக்கூறு இருப்பது உறுதியே. கூறப்படுவன் மதிப்புடையதாயிருக்க வேண்டுமெனின், கூறுவதற்கான உண்மை எதையேனும் மனிதன் கொண்டிருக்க வேண்டும். உண்மையை அறிவுறுத்துவதிலேயே திறமை அனைத்தும் அமைந்து கிடக்கின்றது. அவன், “உண்மையின் அடிப்படையில் உரையாட வேண்டுமேயன்றிக் கிறுக்கர்போலப் பேசுதல்